நாடு தற்போது போகும் நிலையில் பாண் சுடும் பேக்கரிகளில் பாணுக்கு பதிலாக கொரோனா சடலங்களை எரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அதனால் கொரோனா ஒழிப்பை வைத்துக்கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் ஊடகப் பிரசாரங்கள் உடனடியாக நிறுத்திவிட்டு தொற்றினால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சரியான நேரத்தில் நாட்டை முடக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தளர்வுகளை கடுமைப்படுத்த வேண்டிய நேரத்தில் அதனை தளர்த்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் எதிர்வரும் நாட்களிலும் நாளாந்த கொரோனா மரணங்கள் அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதால் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள மயானங்களில் இடம் போதாமல் பேக்கரிகளில் சடலங்களை எரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.