கொரோனா பெருந்தொற்றின் பின்னணியில் பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் குருரமான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
பரிஸ் புறநகர பகுதியான வால்துஓஸ் பிராந்தியத்தில் 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
பரிசின் முன்னணி ஊடங்களில் தலைப்பில் செய்தியாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் புலம்பெயர் இலங்கை குடும்பங்களில் இடம் பெற்ற இன்னொரு குருர கொலையாக பதிவாகியுள்ளது.
பரிசில் இருந்து வடமேற்கே சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வால்துஓஸ் பிராந்தியத்தின் செந்துவான் லமேன் (Saint-Ouen-l’Aumône) பகுதியில் இந்த இரட்டைக்கொலை இடம்பெற்றுள்ளது.
இரவுநேர பணிமுடித்து காலை 10 மணியளவில் வீடுதிரும்பிய இலங்கை பூர்வீகத்தை கொண்ட குடும்பத் தலைவர் தனது 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் அவர்களது படுக்கை அறையில் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்ட காயங்களுடன் உடலங்களாக கண்டதையடுத்து இந்த கொடுர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
உடனடியான காவற்துறையினர் உட்பட்ட அவசரகால பணியாளர்கள் அழைக்கப்பட்டு அந்தப்பகுதி காவற்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. காவற்துறையின் தடயவியல் பிரிவு நடத்திய தேடுதல்களில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு கூரிய ஒரு கத்தி அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
இந்த கொடுர சம்பவத்திலும் கொலையாளி இந்த குடும்பத்திற்குள் இருப்பதற்கான சாத்தியங்களை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகள் குறிப்பிடுகின்றன.
ஆயினும் இந்த கட்டத்தில் இதுகுறித்த திடமான அனுமானங்களை வெளியிடுவதற்கு காவற்துறை விரும்பவில்லை.
குறித்த வீட்டில் இருந்து இரண்டு கொல்லப்பட்டவரின் இரண்டு மகன்கள் காவற்துறை பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்; ஆடைகளில் இரத்தம் தோய்ந்த நிலையில் இருந்தாகவும் இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் இருக்காத மற்ற மகன் கடும் அதிர்ச்சியிலும் இருந்தாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் இன்று காலைவரை அறிவிக்கப்பட்வில்லை துன்பியலுக்கு உள்ளான இந்த குடும்பம் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் சமுகநல உதவிகளை வழங்கும் எம்மாஸ் அமைப்பின் வதிவிடங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தில் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.
தற்போது வெர்செயில் பிராந்திய நீதித்துறை இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டதையடுத்து வேண்டுமென்றே செய்யப்படும் படுகொலைக்குரிய வகைப்படுத்தல் பிரிவின் கீழ் பொந்துவாஸ் அரசு வழக்குதொடுனர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.