PCR 6500 ரூபா, என்டிஜன் 2000 ரூபா வர்த்தமானி அறிவித்தல்


நாட்டின் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையங்களில் PCR மற்றும் ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கான ஆக்கூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.

அதன்படி, தனியார் துறையினரிடம் நடத்தப்படும் PCR பரிசோதனைகளுக்காக 6,500 ரூபாவும், ரெபிட் அன்டீஜன் பரிசோதனைக்காக 2000 ரூபாவும் ஆகக்கூடிய கட்டணமாக அறவிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை