யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (16)காலை போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்க்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்ததற்கு அமைவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் எழுதி நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்ற நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.