மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கொவிட் பரவலிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் நாளை தொடக்கம் எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற செயற்பாடுகள் முற்றாக தவிர்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் எந்த வழக்கும் அழைக்கப்படமாட்டாது எனவும் பொலிஸாரினால் கைதுசெய்யப்படுவோர் மட்டும் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று (19)மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.