மட்டு-களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள கிராமங்களில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரதேசத்திலுள்ள பொதுச்சந்தை உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று(19) தொடக்கம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு வர்த்தக நலன்புரி சங்கத்தினால் சுயமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி வர்த்தக சங்க தலைவர் வ.குணசேகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பிராந்தியசுகாதாரவைத்தியஅதிகாரிபிரிவில் கடந்த பத்து தினங்களில் 200 இற்கும் மேற்பட்ட கொரோனாதொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

கொரோனாதொற்றின் மூன்றாவது அலை காரணமாக களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் 07 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

 இதனையடுத்து பிரதேசத்தில் பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொதுமக்கள் யாவரும் இறுக்கமான சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறும், அத்தியாவசியதேவை தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக வீட்டில் இருந்து அநாவசியமாக வெளியில் வரவேண்டாம் எனவும் கேட்கப்பட்டுள்ளனர்.

புதியது பழையவை