சிறுவர்களுக்கு ‘விற்றமின் சி’ கொடுக்க வேண்டாம்: மருத்துவர் நளின் கிதுல்வத்த.
பெற்றோர் தமது விருப்பப்படி சிறுவர்களுக்கு விற்றமின் சி கொடுப்பது பொருத்தமானதல்ல என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பாளர் மருத்துவர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.
இந்நாட்களில் சிறுவர்களுக்கு ஏற்றவை என சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான மருந்துகள் குறிப்பிடப்பட்டாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாது சிறுவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது என்றார்.
சிறுவர்களுக்கு தன்னிச்சையாக மருந்து கொடுப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.