வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் மற்றும் அங்கு பணிபுரியும் 3 உத்தியோகத்தர்களிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் அங்கு கடமையாற்றும் மூன்று உத்தியோகத்தர்களிற்கு சுகவீனம் ஏற்ப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஏனைய உத்தியோகத்தர்களிற்கு இன்றைய தினம் சுகாதார பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.