மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் நேற்றைய தினம் 75 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இராம கிருஸ்ண மிசனில் 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மிசன் மூடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 75கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள இராம கிருஸ்ணமிசனின் சுவாமி இருவர் உட்பட 42பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் இராம கிருஸ்ணமிசன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம் நேற்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக அன்டிஜன்,பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.
இதன்போது மாமாங்கம் பகுதியில் 21தொற்றாளர்களும்,புளியந்தீவு பகுதியில் 09தொற்றாளர்களும் நாவற்குடா கிழக்கு பகுதியில் 12தொற்றாளர்களும்,மஞ்சந்தொடுவாய் பகுதியில் 06தொற்றாளர்களும் இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.