யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிலையில் மருதடி வீதியில் உள்ள யாழ் இந்திய துணைத்தூதுவரகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன் ,சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் ,யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் யாழில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
