மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள பிரதான சமுர்த்தி வங்கியில் கொரோனா

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள் உள்ள சமுர்த்தி வங்கியில் கடமையாற்றி வருபவர்கள் 15 பேர் உட்பட புளியந்தீவு பிரதேசத்தில் 35 பேருக்கு இன்று வியாழக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தனர்.

குறித்த காரியாலயம் மற்றும் புளியந்தீவு பொதுசுகாதார காரியாலயத்தில் இன்று 111 பேருக்கு எழுமாறாக அன்டிஜன் பிரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்ட தையடுத்து அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள் இயங்கிவரும்  சமுர்த்தி வங்கியில் கடமையாற்றிவருகின்ற 15 பேருக்கும் புளியந்தீவு பகுதியிலுள்ள 20 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

இதேவேளை கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லாத நிலை காரணமாக தொற்று கண்டறியப்பட்டவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
புதியது பழையவை