ஹெரோயின் போதைப் பொருட்களுடன் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று(19) காலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறியின் வழிகாட்டலில் காத்தான்குடி நான்காம் பிரிவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.