கிழக்கு மாகாணத்திற்கான புதிய கல்விப் பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி.புள்ளநாயகம் அவர்கள் இன்று 02.08.2021 கடமையைப் பொறுப்பேற்கின்றார்.
அர்ப்பணிப்போடும், தொலைநோக்குச் சிந்தனையோடும், நினைத்ததை முடிக்கும் ஆற்றலும் சிறந்த தலைமைத்துவமும் கொண்ட திருமதி.நகுலேஸ்வரி.புள்ளநாயகம் அவர்கள் கல்வி அபிவிருத்தியில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவராவார். விசேடமாக பின்தங்கிய கிராமங்களின் வசிக்கும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியின்;பால் கவனம் செலுத்தி அப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைச் சமப்படுத்தல், மற்றும் பௌதிக வள அபிவிருத்தி, விசேட செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல். போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப் பாடசாலைகளில் விஷேட அவதானிப்புகளை மேற்கொண்டு பின்தங்கிய மாணவர்களின் கல்வி அடைவு மட்டங்களில் அதிகரிப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இவ்வாறான சிறந்த சேவையாளர் இன்று மாகாணக் கல்விப் பணிப்பாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். இதுவரை காலமும் கல்வி வலயங்களில் அபிவிருத்திக்காக உழைத்து நிறைந்த அனுபவத்துடன் கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியின்பால் தனது பணியினை மேற்கொள்ளவுள்ளார்.
