அரச அலுவலகங்களில் சேவைக்காக அத்தியாவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பிரதானியே தீர்மானிக்க வேண்டும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் அனைத்து அரச நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.