மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர் கொரோனாவினால் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (22)மரணம் அடைந்துள்ளதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மட்டக்களப்பு கிரான்குளம் மத்தி பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய 1 பிள்ளை தாயான சுமைதன் கோபிதா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு போதனா வைத்திய சுகாதார ஊழியராக கடமையாற்றி உள்ளார் எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்த முதலாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
புதியது பழையவை