இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும் விமானம் இன்று காலை 6.30 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த விமானத்தின் ஊடாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் M.D. Lamawansa உள்ளிட்ட 51 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த விமான சேவையானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையுமென தெரிவிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமையானது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மேலும் ஊக்குவிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
