அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுப்பு


அதிபர்கள் – ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

சம்பளப் பிரச்சினை விடயத்தில், நிதி அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தித் தீர்வுகாண வேண்டும் என்று அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சரவை என்ன காரணம் கூறினாலும் தாங்கள் போராட்டத்தை முன்கொண்டு செல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை