நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக நாட்டில் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வணிக வங்கிகளால் எரிவாயுயை பெற்றுக் கொள்வதற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாமையினாலே தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.