அண்மையில் தமிழ் அரசியல் கைதிகளைத் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த இன்று(25) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த நிலையில் குறித்த நிகழ்வுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளைத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கட்சி உயர் மட்டத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தவை பதவி விலக்க வேண்டும் என்ற அழுத்தம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் குறித்த அமைச்சரை மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன அமைப்பாளர் சந்திரகுமார் அழைத்து ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்காது இரகசியமான முறையில் கூட்டம் நடத்தியுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
