யாழில் பெண் ஊடகவியலாளர்களிடத்தில் பொலிஸார் அராஜகமாக நடந்துள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த சம்பவமானது அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழில் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
அதில் பெண் ஊடகவியலாளரொருவரின் கைப்பேசியை பெற்றுக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தரொருவர் வழங்க மறுத்துள்ளதுடன், அவர்களை கைது செய்யுமாறும் குறிப்பிடுகிறார்.
