உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம்பெயர் தமிழர்களிடம், சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் நீடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலும், தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் குறித்தும் கலந்துரையாடிய போதே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.