ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் antonio guterres மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இலங்கக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் விசேட வரவேற்பு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 1978 ஆம் ஆண்டுகளில் அனைத்துலக நாடாளுமன்ற சங்கத்தினரின் பிரதிநிதியாக இலங்கைக்கு வருகைதந்தபோது கண்டி அநுராதபுரம் பொலன்னறுவை, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதை இதன்போது நினைவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு தாம் மகிழ்வடைவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் பொருளாதார பாதிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் செயலாளரிடம் விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.