மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளர்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராண்குளம் பகுதியில் நேற்று மாலை  இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
மட்டக்களப்பு களுதாவளை பகுதியைச் சேர்ந்த 27 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனையில் இருந்து வந்த காரும், மட்டக்களப்பில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப் பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை