ரயில் போக்குவரத்து நவம்பர் 1இல் ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்துச் சேவைகள் நவம்பா் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று போக்குவரத்து அமைச்சா் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளாா்.

அதற்கமைய, மேல்மாகாணத்துக்கான ரயில் போக்கு வரத்து நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இந்தப் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
.
புதியது பழையவை