எல்லா விடயங்களையும் தனிமனிதனாக, தானே மேற்கொள்ள வேண்டும் என்ற எம். ஏ. சுமந்திரனின் எண்ணப்பாட்டை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்
சமகால அரசியல் நிலவரங்களை அலசி ஆராயும் எமது ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இது குறித்த விடயங்களை பகிரங்கப்படுத்தினார்.
