அனைத்து மதுபானசாலைகளும் இன்று பூட்டு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இன்றைய தினம் மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மது வரித் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் உள்ள 56 மதுவரித் திணைக்கள அலுவலகங்களின் 900 பணியாளர்களை கடமையில் ஈடுபடுத்தி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை