தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பதற்கு சீர்குலைக்க சக்திகள் முயற்சி செய்துவருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக தனியாகவும் குழுக்களாகவும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் விளைவாக சில விடயங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தேசியப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றினை அரசியல்யாப்பின் ஊடாக பெற்றுக்கொள்வதே தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதான குறிக்கோள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
