நவராத்திரியின் இறுதி நாளான விஜயதசமியில் இன்று(15) மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் விசேட நவராத்திரி பூஜைகள் இன்று நடாத்தப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் பிரதேசசபை உறுப்பினர்கள்,பிரதேசபை செயலாளர் பா.சதீஸ்கரன்,உத்தியோகஸ்தர்கள்,ஊழியர்கள் கலந்து கலந்துகொண்டனர்.
இதன்போது முப்பெரும் தேவிகளை வேண்டி விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் கூட்டு பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.


