மட்டக்களப்பு ஊடக அமையத்தில் விஜயதசமி

இந்துக்களின் மிக முக்கியத்துவம்வாய்ந்த விரதங்களில் ஒன்றாக நவராத்திரியின் இறுதிநாளான இன்று விஜயதசமியை முன்னிட்டு விசேட வழிபாடுகள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் மட்டு.ஊடக அமையத்தில் இன்று(15) நவராத்திரியின் விஜயதசமி வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

ஊடகவியலாளர்களின் உபகரணங்கள் வைக்கப்பட்டு மட்டு.ஊடக அமையத்தின் செயலாளர் செ.நிலாந்தனால் பூஜைகள் நடாத்தப்பட்டன.
இன்றைய விஜயதசமி பூஜை வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக வழிபாடுகளில் பங்குகொண்டனர்.
புதியது பழையவை