யாழ் கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு மாடுகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (18)காலை இடம்பெற்றுள்ளது.
பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதம் யாழ் நோக்கி பயணித்துள்ளது.
இதன்போது கூட்டமாக பயணித்த மாடுகளை மோதியுள்ளது.
சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
