விவசாயத்திற்கு உரத்தை வழங்கக்கோரி மட்டக்களப்பிலும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த போராட்டமானது வெல்லாவெளி கமநல பிரிவுக்கு முன்னால் காலை 8 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




