ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள பதினாறு வீடுகளிற்கான பயணாளிகளுக்கு ஒரு இலட்சம் பெறுமதியான முதலாம் கட்ட காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயணாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ்;, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எம்.சந்திரகுமார, பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஏ.ஏ.நாசர், ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்.எல். தஸ்லீம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுற்ப உத்தியோகத்தர் எஸ்.எல்.நளீர் மற்றும் பிரதேச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் நிறுவனங்களின் தலைவர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
