இ.போ.ச பேருந்தினை வழிமறித்து சாரதி மீதும் நடத்துனர் மீதும் தாக்குதல்

யாழ். சாவகச்சேரி - தபாற்கந்தோர் வீதியூடாக பயணித்த இ.போ.ச பேருந்தினை வழிமறித்த சிலர் அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்று பிற்பகல் (14) தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

சாவகச்சேரி - சுன்னாகம் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பயணம் செய்த கெருடாவில் பகுதியில் ஏறிய ஒருவரைக் குறிவைத்து வன்முறையாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

மேலும் இதனைக் காணொளி எடுத்த சாரதி மீதும் நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தினர். 
இதில் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  
புதியது பழையவை