இலங்கையை வந்தடைந்தார்-சுப்ரமணியன் சுவாமி

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி இலங்கையை வந்தடைந்தார்.

இந்நிலையில் , விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் பி பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் விமானநிலையம் சென்று வரவேற்றனர்.

இலங்கை வந்துள்ள சுப்ரமணியன் சுவாமி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்றுமாலை நடைபெறும் நவராத்திரி விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும், இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவை​யொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கிலும் சுப்ரமணியன் சுவாமி உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை