பிரதமருடனான பேச்சு இறுதி முடிவின்றி நிறைவு

ஆசிரியர்கள் – அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை இறுதி முடிவின்றி நிறைவடைந்துள்ளது.

பிரதமர், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை நாளைய தினம் அறிவிப்பதாக அதிபர் ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பமான இந்த கலந்துரையாடல் சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை