நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 18 பேர் நேற்றைய தினம்(23) கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,611 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று இதுவரையில் 433 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 535,962 ஆக அதிகரித்துள்ளது.
புதியது பழையவை