இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட யாழினைச் சேர்ந்தவர்களது 35வது ஆண்டு நினைவேந்தல் பிரம்படி பகுதியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வானது காலை 6.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரம்படியில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு ஈகைச்சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஜெயாகரன் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


