தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக வட மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதை அடுத்தே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான பரிந்துரைகள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்டிருந்தது என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வி.சிவஞானசோதியின் மறைவை அடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
