ஒரே நாடு ஒரே சட்டம் -தமிழரை புறக்கணித்த கோட்டாபய அரசு

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான அரச தலைவர் செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் சார்ந்து எவரும் நியமிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட அரச தலைவர் செயலணியே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணி உருவாக்கம் தொடர்பில் நேற்று (26) விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹொமட், விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப்
கலீல் ரஹுமான்
அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை