எமக்கு மரணச் சான்றிதலோ, நஷ்ட ஈடோ வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளே வேண்டும் .என யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உப தலைவி நிர்மலநாதன் மேரி ரஞ்சினி தெரிவித்தார்.
இன்று யாழ் ஐக்கிய நாடுகள் அலுவலக முன்றலில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது பிள்ளைகள் உறவுகளை நீண்ட காலமாக பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றோம் தற்போதைய அரசாங்கமானது எமக்கு மரணச் சான்றிதலையும் நஷ்ட ஈட்டையும் கொடுத்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட நினைக்கின்றது.
ஆனால் எமக்கு எமது பிள்ளைகள் உயிரோடு வேண்டும் எமக்கு மரணச் சான்றிதழ் அல்லது நஷ்ட ஈடோ எமக்கு வேண்டாம் அது தவறும் பட்சத்தில் எங்களையும் மரணித்து விடுங்கள் நாங்கள் மரணச் சான்றிதலையோ நஸ்ட ஈட்டயோ என்றுமே ஏற்க மாட்டோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார். தெரிவித்தார்
