பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் தொடர்பில் பிரித்தானியாவின் கரிசனை


இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கம் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்ட கால உறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

அதேவேளை 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் சரத் வீரசேகரவுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

மேலும் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் இதன்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை