தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி

ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒருசிலர் தொடர்பில் அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சிகளின் செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தேரல்தல்கள் ஆணைக்குழு மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழவின் உறுப்பினர்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அமைந்திருக்குமாயின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆளுநர்களின் கடமையாகும்.
எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் 2021 ஆம் ஆண்டுக்கான வாக்களார் இடாப்பின் பிரதியொன்றை நாடாளுமன்றினை பிரதிநிதித்துவபடுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இலவசமாக வழங்கவும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
புதியது பழையவை