மட்டக்களப்பில் கித்துள், உறுகாம குளங்களை இணைப்புச் செய்யும் திட்டத்தினை பார்வையிட்ட அமைச்சர் நாமால் ராஜபக்ஷ

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டு சில அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்ததுடன், மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார்.

அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கித்துள் உறுகாமம் இணைப்புத் திட்டத்தினை பார்வையிட்டதுடன் விவசாயிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

புதியது பழையவை