உணவட்டுன, ஹீனடிகல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவட்டுன, ஹெடதெமலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய், பொலிஸாருக்கு நிதி வழங்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டவர் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரராதுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனார்.
