மட்டக்களப்பு மாவட்ட விமானப்படையினரால் மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தினை துப்புரவு செய்யும் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு விமானப்படையினர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன் காந்தி பூங்காவில் சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு விமானப்படை வனிதா சேவை பிரிவு அதிகாரிகளினால் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக அபிவிருத்தி பணிகளின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து மட்டக்களப்பு நகர் பகுதிகளில் சமூக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
