மட்டக்களப்பு-களுதாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (07) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

படுகாயமடைந்த இருவரையும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும், மட்டக்களப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும் வீதியைக் கடக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவ்விபத்து சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை