நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கும் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதன் பின்னணியிலே டயானா கமகே இவ்வாறு நீக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் இந்த நடவடிக்கைக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.