மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள 2020 க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை வாழ்த்தி பாராட்டும் திட்டத்தினுடாக இன்றைய(07)தினம் ம/ம/மே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் அதிபர் அரசரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்த 39 மாணவர்களுக்கு உதயகுமார் கல்வி மையத்தினுடாக பாராட்டுகளும் கற்பதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதயகுமார் கல்வி மையத்தின் ஸ்தாபக தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ந.உதயகுமார்,செயலாளர் திரு.ம.ஜெயக்கொடி,பொருளாளர் திருமதி விதுசா அனோஜன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,உதயகுமார் கல்வி மையத்தின் தலைமை ஆலோசகருமான திரு.பா.அரியநேத்திரன் ஜயா,மக்கள் நல இளைஞர் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.வே.அன்பழகன்,பாடசாலை,உபஅதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.