வாழைச்சேனை காவல்துறை பிரிவில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் தனியார் ஒருவரின் தோட்ட காணியில் இருந்து பழைய மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.
தற்போது பெரும்போக வயல் வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் விவசாயி தனது தோட்ட காணியில் வேலை செய்து கொண்டிருந்த போது மோட்டார் குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.
அதனையடுத்து குறித்த விவசாயி வாழைச்சேனை காவல்துறைக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்மோட்டார் குண்டு மீட்கப்பட்டதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.