நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது

இலங்கையின் இன்றைய வானிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் வட - மத்திய மாகாணங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் இயல்பான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

மத்திய மலைகளின் மேற்கு சாய்வு, வடக்கு, வட - மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிமீ வேகத்தில் அதிகரிக்கலாம் என்றும் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
புதியது பழையவை